கொரோனா பாதிப்பு, முழு ஊரடங்கு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

 • Share this:
  தமிழகத்தின் முதலமைச்சராக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பொறுப்பேற்றார். அவர், முதல்வராக பதவியேற்ற நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை முதல் இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தார். இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தவிர தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

  ஆட்சிப் பொறுப்பேற்றதும் நடைபெறவுள்ள முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், தற்போது தமிழகத்தில் நிலவி வரக்கூடிய கொரோனா பரவல் மற்றும் தடுப்பு பணிகள், மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நிதி ஒதுக்கீடு, மேலும் அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது.

  நாளை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் நடவடிக்கை குறித்தும் ஆலோசனை செய்யப்படும். நிதி நிலைமை குறித்தும், தொழில் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்வதாகவும், துறை ரீதியாக தற்போது இருக்கும் நிலைமை குறித்தும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

  இந்த கூட்டத்திற்கு பின்பு முக்கியமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: