முகப்பு /செய்தி /தமிழ்நாடு / 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 காணொலி வாயிலாக முதலமைச்சர் திறப்பு

காணொலி வாயிலாக முதலமைச்சர் திறப்பு

Tamilnadu CM Stalin | சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல் சேமிப்புத் தளங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 106 நவீன நெல் சேமிப்புத் தளங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், 8 மாவட்டங்களில் 105 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 450 மெட்ரிக் டன் கொள்ளளவில், 106 நவீன நெல் சேமிப்புத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நெல் சேமிப்புத் தளங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

தொடர்ந்து 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 12 புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.குடியரசு தின விழா அணிவகுப்பில் சிறப்பாக செயல்பட்ட படைப் பிரிவிற்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதலமைச்சர் வழங்கினார்.

First published:

Tags: CM MK Stalin, Tamilnadu