செங்கல்பட்டு ஆய்வகத்தில் தடுப்பூசி உற்பத்தி: உயர்மட்டக் குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார்.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் செயல்படாமல் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி ஆய்வகத்தை மு.க.ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தார். இதனைத் தொடர்ந்து, ஆய்வகத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவருவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதில், ஆய்வகத்தில் தடுப்பூசியை உற்பத்திசெய்ய என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனை அமைச்சர் தங்கம் தென்னரசு வியாழக்கிழமை சந்தித்து, தடுப்பூசி உற்பத்தியை தொடங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த உள்ளார்.

  முன்னதாக, செங்கல்பட்டு ஆய்வகத்தில் மத்திய அரசின் நிறுவனமான ஹெச்எல்எல் பயோடெக் நிறுவனத்திற்கு உற்பத்தியைத் தொடங்குவதற்கான உரிய நிதியை ஒதுக்கீடு செய்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: