நீலகிரி மாவட்டம் உதகையில் நாளை நடைபெறவுள்ள 124 ஆம் ஆண்டு மலர் கண்காட்சியை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் துவங்கி வைக்கிறார். இதற்காக இன்று
கோவையில் இருந்து உதகை புறப்பட்டு சென்றார். உதகை செல்லும் வழியில் அவருக்கு குன்னூர் பொதுமக்களும்,
திமுக நிர்வாகிகள் என பலர் லெவல்கிராஸ் பகுதியில் மேளாதாளம் முழங்க, பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
குன்னூர் வந்த முதல்வர் "தான் முதல்வராக பொறுபேற்ற பின் நீலகிரி மாவட்டத்திற்கு வருவது இதுவே முதல்முறை என்றும், மக்களோடு மக்களாய் இருந்து தங்களுக்கு பல்வேறு உதவிகளை என்றும் வழங்குவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உதகை சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மந்து என்ற இடத்தில் தோடர் பழங்குடியின மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்பொழுது வாகனத்தில் இருந்து இறங்கிய தமிழக முதல்வர், தோடர் பழங்குடியின மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய இசைக்கு ஏற்றபடி நடனமாடினார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.