ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

  உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மன்னர் ராஜராஜ சோழன் முடிசூட்டிய தினத்தை, ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு 1,037-வது சதய விழா இன்று காலை மங்கல இசையுடன் தொடங்கிய நடைபெற்று வருகிறது.

  இந்த நிலையில், மன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னர் ராஜராஜ சோழனின் பிறந்தநாளை நவம்பர் 3-ம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது.

  ALSO READ | அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

  இந்த நிலையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும், தஞ்சையில் உள்ள ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CM MK Stalin, MK Stalin, Raja Raja Chozhan