• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கரூரில் வாகன சோதனையின்போது வேன் மோதி உயிரிழந்த ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கரூரில் வாகன சோதனையின்போது வேன் மோதி உயிரிழந்த ஆய்வாளரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

கரூரில் வாகன சோதனையில் வேன் மோதி உயிரிழந்த வாகன ஆய்வாளர் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 50 லட்ச ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

  • Share this:
    கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் கனகராஜ் (57). இவர் இன்று காலை 9.30 மணியளவில் கரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகேயுள்ள வெங்கக்கல்பட்டி மேம்பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்த முயன்றபோது வேன் கனகராஜ் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த கனகராஜ், சிகிச்சைக்காக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

    இந்தநிலையில் உயிரிழந்த வாகன ஆய்வாளரின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 50 லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரியும் நாகராஜ் இன்று காலை கரூர் - திருச்சி நான்கு வழிச்சாலையில் வாகன தணிக்கை பணியிலிருந்தபோது எதிர்பாரத வகையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்தார்.

    மோட்டார் வாகன ஆய்வாளர் கனகராஜ் பணியிலிருக்கும்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியினைக் கேள்வியுற்று மிகுந்த வருத்தமடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்த கனகராஜின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்தாருக்கு அரசு சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: