ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

மு.க.ஸ்டாலின்

ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

  • Share this:
தமிழக முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் மறைவுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த பாலமுருகன் நேற்றிரவு பெரியகுளம் கொண்டுவரப்பட்ட நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு உயிரிழந்தார். அவரது உடல் தென்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரின் உடலுக்கு உறவினர்கள், அதிமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஓ பன்னீர்செல்வம்


சகோதரரின் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்த ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் எம்.பி ரவீந்திரநாத் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து பெரியகுளம் புறப்பட்டு சென்றனர்.

முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்:

ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார்.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் இளைய சகோதரர் ஒ.பாலமுருகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதை அறிந்து வேதனையுற்றேன். தகவல் அறிந்ததும் ஓ.பன்னீர் செல்வம் அவர்களை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.

Read More: ஓ.பன்னீர் செல்வம் சகோதரர் பாலமுருகன் காலமானார்!


பாலமுருகன் அவர்களை இழந்து வாடும் பன்னீர் செல்வம் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ராஜா, சுந்தர், பாலமுருகன் என 3 சகோதர்களுள் உள்ளனர். ஏற்கனவே ஒரு மூத்த சகோதரர் காலமாகிவிட்ட நிலையில் 2வது சகோதரரான பாலமுருகன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில் விமானப் படை விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை கொண்டுவரப்பட்டு பாலமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: