Union
Budget 2023

Highlights

ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பட்டு வேட்டி, சட்டை... பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட்டு வேட்டி, சட்டை... பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

முதலமைச்சர் பொங்கல் வாழ்த்து

Pongal 2023; பொங்கல் திருநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் இன்று பொங்கல் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டின் முன்பு கோலமிட்டு புதுப்பானை பொங்க பொங்கலோ பொங்கல் என முழக்கமிட்டு பொங்கல் திருநாளை மக்கள் கொண்டாடுகின்றனர்.  பொங்கல் திருநாளுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பட்டு வேட்டி சட்டை அணிந்து வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவில், “தாய்த்தமிழ்நாட்டு மக்கள் அனைவர்க்கும் இன்பம் பொங்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். உழவே தலை என வாழ்ந்த உழைப்புச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நாம். மண்ணையே குணத்தால் பிரித்து நிலத்தைப் போற்றிய மக்கள் நம் முன்னோர்கள். மனிதன் மட்டுமல்ல மற்ற உயிரினத்தையும் தன்னோடு இணைத்து வாழ்ந்த சமூகம் நம்முடையது. இனம், மண், மக்கள், விளைச்சல் – உணவு – மற்ற உயிரினங்கள்- இவை அனைத்துக்கும் சேர்த்துக் கொண்டாடும் ஒற்றை விழாதான் பொங்கல் பெருவிழா! கற்பனை கதைகள் இல்லாத பண்பாட்டுப் பெருவிழா. வானம் கொடுத்தது; பூமி பெற்றது என்ற அன்பான உறவை நிலத்தின் மீது நின்று வான்நோக்கி கரம் குவித்து உதயசூரியனை வணங்குவதன் மூலமாக உலகுக்கு நாம் உணர்த்துகிறோம்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “புதுப்பானையில் புத்தரிசி போட்டுப் புத்தொளி ஊட்டி, அடுப்பு மூட்டிப் பானைக்கு மேலே வழிந்தோடும் அன்பு நுரையைப் போல நாடு முழுவதும் அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்கி பரவ வேண்டும் என்று விரும்புகிறேன்! “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பார்கள். அதனால்தான் இந்தத் தை மாதத்தைத் தமிழ் மொழியின் பெருமையைப் பறைசாற்றும் மாதமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம். பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தமிழர் திருநாள், திருவள்ளுவர் தினம், இலக்கிய திருவிழா, கலைத் திருவிழா, நம்ம ஊர் திருவிழா, ஏறு தழுவுதல் என தமிழர் மாதமாகவே தை மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது” என்ற முதலமைச்சர்,

சாதி மதப் பாகுபாடுகள் எவையும் இல்லாமல் தமிழர்கள் அனைவரும்- தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடும் சமத்துவப் பொதுவிழாவாகவே பொங்கல் விழா என்றும் திகழ வேண்டும்! தாய்த்தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் என்றும் இன்பம் பொங்கட்டும். செங்கரும்பைப் போல மக்கள் வாழ்வு தித்திக்கட்டும்” என்று கூறி அனைவர்க்கும் எனது தைத்திருநாள் – தமிழர் பெருநாள் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, Pongal 2023