• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதல்வர்களில் முன்னுதாரணமாக திகழ்பவரே... ஸ்டாலினுக்கு கமல் நன்றி!

முதல்வர்களில் முன்னுதாரணமாக திகழ்பவரே... ஸ்டாலினுக்கு கமல் நன்றி!

கோப்புப் படம்

கோப்புப் படம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
    நடிகர்  கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது 67வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில், “  மழை வெள்ளத்தால் தவிக்கும் ஏழை எளிய மக்களுக்கு வேண்டிய உதவிகளை விரைந்து செய்யுங்கள்; அதுதான் நீங்கள் எனக்குத் தரும் சிறந்த பிறந்தநாள் பரிசாக இருக்கமுடியும்” என்று தனது கட்சித் தொண்டர்களுக்கு கமல் கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், கமல்ஹாசனின் பிறந்தநாளை ஒட்டி,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய திரையுலகின் மிகச் சிறந்த நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான அன்பு நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நால்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நலமுடன் நற்பணிகளைத் தொடர்ந்திர வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

    இதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன், “ இனிய நண்பரும் முதல்வர்களில் முன்னுதாரணமாகத் திகழ்பவருமான மு.க.ஸ்டாலின் அவர்களே, தங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என் பிறந்தநாளுக்கு மேலும் வர்ணம் சேர்க்கிறது. அன்பும் நன்றியும் “ என்று பதிவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: சென்னையில் மழை பாதிப்பு பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: