Home /News /tamil-nadu /

டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பயணத்தின் பிளான் இதுதான்!

டெல்லி சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... பயணத்தின் பிளான் இதுதான்!

முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

CM MK Stalin | பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கின்றார் முதல்வர் ஸ்டாலின்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றார். இதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன் உள்பட உதவியாளர்கள் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சென்றனர்.

    டெல்லி சென்ற முதலமைச்சரை அமைச்சர்கள் துரைமுருகன் கே.என். நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன் தா.மோ.அன்பரசன் சேகர்பாபு ஆவடி நாசர் உள்பட பலர் வழியனுப்பி வைத்தனர்.
    டெல்லியில் நாளை காலை 10:30 மணிக்கு குடியரசு துணை தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

    Also Read : கலைஞர் சொல்லி திருமா செய்யாத ஒன்று இது மட்டும் தான் - முதல்வர் ஸ்டாலின்

    காலை 11:30 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. மாலை 4:30 மணிக்கு பிரதமர் பிரதமர் மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்கின்றார்.

    அப்போது நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் முதல்வர் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு நாள் டெல்லி பயணத்தை முடித்து கொண்டு நாளை இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்புகிறார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: CM MK Stalin, Delhi

    அடுத்த செய்தி