ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மழை பாதிப்பு.. கடலூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. முழு பயணத்திட்ட விவரங்கள்!

மழை பாதிப்பு.. கடலூர் புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்.. முழு பயணத்திட்ட விவரங்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வடகிழக்கு பருவ மழையால் சேதமான இடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிடுகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சென்னையில் இருந்து நேற்று புதுச்சேரி புறப்பட்டு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 7.30 மணிக்கு கடலூர் பயணத்தை தொடங்குகிறார்.

  முதலில் கடலூர் மாவட்டம் கீழ்பூவாணிகுப்பம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை ஆய்வு செய்யும் அவர் அறுவாமூக்கு திட்டம் குறித்த விளக்கப்படத்தை பார்வையிடவுள்ளார்.

  தொடர்ந்து, சிதம்பரம் அடுத்த வல்லம்படுகை கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது வீடுகளையும் பார்வையிடவுள்ளார்.

  இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு செல்லும் முதலமைச்சர், உமையாள் பதி கிராமத்தில் ஆதி திராவிடர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

  பின்னர் அதே பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களையும் பார்வையிடவுள்ளார்.

  இதையும் படிங்க | கனமழை எதிரொலி : இந்த பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

  இதனைத்தொடர்ந்து சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.

  இவற்றை நிறைவு செய்த பின்னர், சாலை மார்க்கமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CM MK Stalin, Heavy rain, MK Stalin