Home /News /tamil-nadu /

மேடையில் ஸ்லிப்பான கலெக்டர்... பதறிப்போய் தாங்கி பிடித்த முதல்வர் ஸ்டாலின் - வைரலாகும் காணொளி

மேடையில் ஸ்லிப்பான கலெக்டர்... பதறிப்போய் தாங்கி பிடித்த முதல்வர் ஸ்டாலின் - வைரலாகும் காணொளி

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Viral Video | நினைவு பரிசு வழங்க மாவட்ட ஆட்சியர் அம்ரித் வந்த போது தவறி விழுந்தார். அப்போது முதல்வர் அவரை தாங்கி பிடித்து தூக்கிவிட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

    நீலகிரி மாவட்டம் உதகைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார். அப்போது நினைவு பரிசு வழங்க மாவட்ட ஆட்சியர் அம்ரித் வந்த போது தவறி விழுந்தார். முதல்வர் அவரை தாங்கி பிடித்து தூக்கிவிட்டார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

    உதகை 200வது ஆண்டு துவக்க விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை , உதகை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழா மேடையின் அருகில் உதகை குறித்த புகைபட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். விழா துவங்கியதும் முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்க மாவட்ட ஆட்சியர் அம்ரித் வந்த போது நிலை தடுமாறினார்.



    அப்போது முதல்வர் ஸ்டாலின் மற்றும் நீலகிரி மக்களவை உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் ஆட்சியர் அம்ரித்தை தாங்கி பிடித்தனர். பின்னர் 118.79 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், நிறைவடைந்த திட்ட பணிகளை திறந்து வைத்தல், 9422 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.



     

    முன்னதாக விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் , படுகர், தோடர் , கோத்தர் இன மக்களின் மொழிகளில் "வணக்கம்" தெரிவித்தார். வாழ்வில் எத்தனையோ முறை உதகை வந்திருத்தாலும், முதலமைச்சராக உங்களை சந்திக்க வந்திருப்பதில் ஊட்டியை போலவே மனுசும் குளிர்ச்சியாக இருக்கின்றது என தெரிவித்தார்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: DMK, MK Stalin, Viral Video

    அடுத்த செய்தி