முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தஞ்சையில் அண்ணா, கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சையில் அண்ணா, கருணாநிதி முழு உருவ சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நாளை பங்கேற்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

    தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயரமுள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி முழு உருவ சிலையினை திறந்து வைத்தார்.

    இரண்டு நாள் பயணமாக தஞ்சை வந்த  முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்.கே.மூப்பனார் சாலையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தின் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 அடி உயரமுள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, மற்றும் கருணாநிதி முழு உருவ சிலைகளை திறந்து வைத்தார். திறந்து வைத்தபின் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். இரவு தனியார் விடுதியில் தங்கி, நாளை காலை 10 மணிக்கு தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மைதானத்தில் அரசு சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, 43 ஆயிரம் பயனாளிகளுக்கு, 237 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    மேலும் 98.77 கோடி மதிப்பிலான 90 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் இரண்டாம் உலக போர் நினைவுச் சின்னமான மணிக்கூண்டு உடன் கூடிய ராஜப்பா பூங்கா மற்றும் கீழவாசல் பகுதியில் கட்டப்பட்டுள்ள சரபோஜி மார்க்கெட் உள்ளிட்டவற்றை திறந்துவைக்கும் அவர், 1229.83 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    First published: