சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்த நிலையில், கீழடியில் தொல்லியல் அகழாய்வு மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிடுகிறார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014ஆம் ஆண்டு முதல் அகழாய்வு நடந்து வந்த நிலையில், ஏழாம் கட்ட அகழாய்வு பணிகள் அண்மையில் நிறைவடைந்தது. அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கீழடிக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு நடைபெற்று முடிந்த அகழாய்வு பணிகள் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய உள்ளார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு கீழடியில் சாலை அமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றது. மேலும், அகழாய்வு குழிகள் இருக்கும் இடத்தில் பந்தல் மற்றும்மேடை அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஏடிஜிபி தாமரைகண்ணன் தலைமையில் டிஜஜிகள், எஸ்பிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கீழடியில் ஆய்வு பணிகளை முடித்துக் கொண்டு மதுரை திரும்பும் முதலமைச்சர் அங்குள்ள பயணியர் விடுதியில் தங்க உள்ளார்.
Must Read : கனமழை : திருச்சி, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
அதைத்தொடர்ந்து நாளை பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை விழாவில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.