ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அண்ணா, கருணாநிதியின் கனவுத் திட்டத்தை பாஜகவும், அதிமுகவும் தடுத்துவிட்டன; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

அண்ணா, கருணாநிதியின் கனவுத் திட்டத்தை பாஜகவும், அதிமுகவும் தடுத்துவிட்டன; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

சேது சமுத்திரம் திட்டத்தை பாஜகவும் அதிமுகவும் தடுக்காமல், இருந்திருந்தால் நாட்டின் வருவாய் அதிகரித்திருக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

திமுக பொருளாளரும், நாடாளுமன்ற திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு எழுதிய "பாதை மாறா பயணம்" நூல் வெளியிட்டு விழா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நூலை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 17 வயதில் தொடங்கி 80 வயதை கடந்தும் ஒரே கட்சி ஒரே கொடி என்று டி.ஆர்.பாலு பயணிப்பதாக புகழாரம் சூட்டினார்.

சேது சமுத்திர திட்டம் குறித்து பேசிய முதலமைச்சர், திட்டத்தை நிறைவேற்றியிருந்தால், நாட்டில் தொழில் வளர்ச்சி பெருகியிருக்கும் என்று கூறினார். அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கனவுத்திட்டத்தை பாஜகவும், அதிமுகவும் தடுத்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.

நன்றி தெரிவித்து பேசிய டி.ஆர்.பாலு, வெறும் கல்லாக இருந்த தம்மை முரசொலிமாறன் செதுக்கியதாகவும், கருணாநிதி உயிர் தந்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

First published:

Tags: DMK, MK Stalin