ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ரூ.1,500 கோடியில் கூடுதலாக 7200 வகுப்பறைகள்.. 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

ரூ.1,500 கோடியில் கூடுதலாக 7200 வகுப்பறைகள்.. 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க, ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க, ஸ்டாலின்

1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சட்டப்பேரவை 3 நாள் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.

  சென்னை தலைமைச் செயலகத்தில் மூன்றாவது நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது, இதில் நேரம் இல்லா நேரத்தின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.அதில், மொத்தம் 3337 அறிவிப்புகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும், காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  மேலும், தமிழக அரசு பள்ளிகளில் கூடுதலாக வகுப்பறைகளை கட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அவர், நடப்பாண்டில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7200 வகுப்பறைகள் கட்டப்படவுள்ளதாகவும் அறிவித்தார்.

  ALSO READ | தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்; குற்றவாளியை கூண்டில் ஏற்றுக - வைகோ ஆவேசம்

  இலவச பேருந்துகள் மூலம் 44 லட்சம் பேர் பயணம் செய்யப்பட்டதாகவும், இதனால் பெண்களுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சமானதாகவும் தெரிவித்தார். இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரூ. 500 கோடி மதிப்பீட்டில் 1000 புதிய பேருந்துகள் இயக்கவும், 1000 பழைய பேருந்துகளை புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: CM MK Stalin, MK Stalin, TN Assembly