தமிழகத்தில் படித்த அனைவருக்கும் வேலை என்ற சூழலை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 14வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும், தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் கருத்தரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அங்குள்ள அரங்குகளையும் பார்வையிட்டார். 31 புத்தொழில் நிறுவனங்களுக்கு முதல்கட்டமாக 5 லட்சத்திற்கான மானிய காசோலையை முதலமைச்சர் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின்பு தொழில்துறை சார்பில் ஆறு முதலீட்டு மாநாடுகளை நடத்தி இருக்கிறது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருக்கிறது. தெற்காசியாவிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு மாற வேண்டும் என்பதே எனது முழுமுதல் விருப்பம் ஆகும்.
புத்தாக்க மற்றும் புத்தொழில் சார்ந்த முன்னெடுப்புகளிலும் தமிழ்நாடு தலைசிறந்து விளங்க வேண்டும் என்ற குறிக்கோள் காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் இந்த நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு நிதிநிலை வரலாற்றிலேயே முதல் முறையாக சுமார் 250 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பில் திட்டங்களை அறிவித்து அதை திறம்பட செயல்படுத்திக்கொண்டும் இருக்கின்றோம்.
இதையும் படிக்க: கருணாநிதியின் பேனா சிலை அமைக்க மத்திய சுற்றுசூழல் துறைக்கு தமிழக பொதுப்பணி துறை கடிதம்
முற்போக்கான திட்டங்கள் -தேவையான நிதி ஆதாரங்கள் -துறைகள் ஒருங்கிணைப்பு - தொடர் கண்காணிப்பு - ஆகிய நான்கும் இணையும் போதுதான் மக்களுக்கு முழுமையான நன்மை கிடைக்கும். இதில் ஒன்று பலவீனம் அடைந்தாலும் முழுப்பலனை பெற முடியாது.
அந்த வகையில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டாக வேண்டும். புத்தொழில்களை நீங்கள் உருவாக்குகிறீர்கள். இதற்கான மனித வளத்தை உருவாக்க நான் முதல்வன் போன்ற திட்டங்கள் கைகொடுக்கும்.படித்த அனைவர்க்கும் வேலைகள் - அவர்களது படிப்புக்கு ஏற்ற வேலைகள் - நிறுவங்களின் தேவைக்கு ஏற்ற பணியாளர்கள் - என்ற சூழலை தமிழகத்தில் உருவாக்குவோம். புத்தொழில் நாடாக - புத்தொளி நாடாகவும் தமிழகத்தை உருவாக்குவோம்” என பேசினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, CM MK Stalin, Tamilnadu government