சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக அரங்கில் ஏற்றமிகு ஏழு திட்டங்கள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மேடையில் பேசிய அவர், “ஏற்றமிகு ஏழு திட்டங்கள் விழா நடைபெறும் இடத்தை எண்ணி பார்க்கும் போது அண்ணா பெயர் கொண்ட இந்த நூலகத்தில் பங்கேற்பதில் உணர்ச்சியும் மகிழ்சியும் அடைகிறேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல் திட்டத்தை ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சொன்னேன். பொருளாதாரம், வேளாண்மை, நகர்புற வளர்ச்சி, சமூக பாதுகாப்பு உள்ளிட்ட 7 இலக்குகளின் அடிப்படையில் ஆட்சி இருக்கும் என ஏற்கனவே குறிப்பிட்டேன்” என தெரிவித்தார்.
எனது குடும்பமாக நினைக்கிறேன்
பதவி ஏற்றவுடன் நான் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இந்த திட்டம் பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக இளைஞர்களை கல்வியில் பன்முகத்தன்மையில் முன்னேறியவர்களாக உருவாக்க நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தேன். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு நிறைவடைய உள்ள நிலையில்
2 லட்சம் கோடி அளவில் புதிய முதலீடுகள் ஈர்கப்பட்டுள்ளன.
“அன்பை பகிர்ந்தோம்”... ஆளுநர் பன்வாரிலால் பேத்தி திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி..!
மழை காரணமாக நீர் வளம் பெருகி உள்ளது.வேளாண்மை செய்யும் பரப்பு அதிகரித்து சாகுபடி பெருகி உள்ளது. தமிழகத்தின் அனைத்து குடும்பங்களையும் எனது குடும்பமாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.
எனக்கு நானே இலக்கு வைத்து கொண்டு எந்நாளும் உழைக்கிறேன். அரசியலுக்கு வராமல் போயிருந்தால் என்னவாகி இருப்பீர்கள் என்ற கேள்விக்கு, நிச்சயமாக நான் அரசியலுக்கு வந்திருப்பேன் எனக் கூறியவன் நான். மனிதர்களே மனித கழிவுகளை அகற்றும் அவல நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இன்று திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. அரசு என்பதை அதிகாரம் என்பதாக இல்லாமல் கடமையாகவும் சேவையாகவும் நினைத்து இலக்கு வைத்து பணி செய்து வருகிறேன் என தெரிவித்தார்.
ஏற்றமிகு தமிழ்நாடாக மாறியுள்ளது
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பது பொதுவான இலக்கு. எனவே எளிய மக்கள் பயன்பெறும் எண்ணற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறேன், அந்த வகையில் மிக முக்கியமான ஏழு திட்டங்களை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோட்டையில் நிறைவேற்றும் திட்டங்களை கடைக்கோடி மனிதர்களுக்கும் சென்று சேர வேண்டும் , கடைக்கோடி மனிதர்களின் நன்மைக்காகவே திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுகின்றன. மாநிலங்கள் எல்லைகளால் உருவானது இல்லை , எண்ணங்களால் உருவானது. தாழ்ந்த தமிழ்நாடே என்பது திராவிட மாடல் ஆட்சியில் ஏற்றமிகு தமிழ்நாடாக மாறி உள்ளது என தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, CM MK Stalin, MK Stalin, Tamilnadu