நாடு முழுவதும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 33 லட்சம் இளையோருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பேசிய முதலமைச்சர், வைரஸ் தாக்குதலை தடுக்க நமக்கு முன்னாள் உள்ள கேடயம் முககவசம், பொது இடங்களில் கூட்டம் உள்ள இடங்களில் முகக்கவம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசுகையில் கேட்டுக்கொண்டார்.
மேலும், வைரஸ் தாக்குதலை தடுக்க நமக்கு முன்னாள் உள்ள கேடயம் முககவசம், பொது இடங்களில் கூட்டம் உள்ள இடங்களில் முககவம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து நோய் தொற்றின் வீரியத்திலிருந்து தற்காத்து கொள்ள முடியும்.
அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் தொற்று அதிகரித்து வரும் சூழலில் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டோர் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என உங்கள் குடும்பத்தில் ஒருவனாய் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.
Read More : பிரதமர் மோடியை இப்போது திமுக வரவேற்பது ஏன்?.. திமுக எம்.பி கனிமொழி விளக்கம்
கொரோனா தடுப்பூசிகள் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து நோய் தொற்றின் வீரியத்திலிருந்து நம்மை தற்காத்து கொள்ள முடியும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
Must Read : ‘முதலமைச்சர் நிச்சயமாக கேள்வி கேட்பார்’ - அமைச்சர் அன்பில் மகேஷ்
தடுப்பூசி போட்டுக்கொள்வோம் புதிய வைரஸ் தாக்குதலை தடுத்து நிறுத்துவோம். வரும் காலத்தில் இந்த தொற்றிலிருந்து விடுபட்ட மாநிலமாக தமிழகம் திகழும் நிலையை உருவாக்குவோம். ஒருகையால் தட்டினால் சத்தம் வராது, அப்படி இரண்டு கைகளால் தான் தட்ட முடியும். அரசின் முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, MK Stalin, Omicron