Home /News /tamil-nadu /

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்

டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்

நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் மு.க.ஸ்டாலின்

நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் மு.க.ஸ்டாலின்

MK Stalin : டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  சந்தித்துப் பேசினார்

    டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான 14 கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தார். அதில் மருத்துவர் மாணவர் சேர்க்கை கொள்கை, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பினை பதிவு செய்த அவர், உக்ரைனில் இருந்து தாயகம் வந்துள்ள மருத்துவ மாணவர்கள், இந்தியாவிலேயே படிப்பை தொடர வழியை கண்டறியவும் வலியுறுத்தினார்.

    பிரதம மந்திரி வேளாண்மை பயிர் பாதுகாப்பு திட்டத்திற்கு, மத்திய அரசின் பங்களிப்பை முந்தைய நிலைக்கு உயர்த்த கோரிக்கை உள்ளிட்ட தொழில்துறை கோரிக்கைகளுடன், நடப்பாண்டு ஹஜ் புனிதப்பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்கும்படி கோரிக்கை வைத்தார். காலணி உற்பத்தியில் பி.எல்.ஐ திட்டத்தை அறிமுகப்படுத்துவது என்று அறிவிக்கவும், பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிக்கும் தமிழர்களுக்கு உதவ தமிழக அரசை அனுமதிக்கவும், தமிழ்நாட்டில் புதிய ரயில்வே திட்டங்களை தொடங்குவது குறித்தும் கோரிக்கை வைத்தார். தமிழகத்தில் நியூட்ரினோ ஆய்வக திட்டம் அமைப்பதை கைவிடவும், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிர்ப்பும் தெரிவித்தார். நரிக்குறவர் சமூகங்களை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

    அத்துடன், டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், டிஆர்டிஓ ஆராய்ச்சி மையத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தார்.

    மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மதியம் 1.40 மணிக்கு சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை நீக்குவது, கட்டணத்தை குறைப்பது குறித்த மனுவை முதலமைச்சர் வழங்கினார். துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், புதிய நெடுஞ்சாலைகளை அமைக்கும் பணிகள் ஆகியவற்றை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்


    இதனைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மதியம் 3.30 மணிக்கு சந்தித்தார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகைசெய்யும் மசோதாவுக்கு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 350 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

    பின்னர், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை, அக்பர் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் மாலை 4 மணிக்கு சந்தித்துப் பேசினார். ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையை மூடுவதை கைவிட வேண்டும், தமிழகத்தில் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மையத்தை அமைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ராஜ்நாத் சிங்குடனான சந்திப்பின்போது, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உடனிருந்தார். அப்போது, பொருநை நாகரீகம் குறித்த புத்தகத்தை ராஜ்நாத் சிங்குக்கு அன்பளிப்பாக மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    Must Read : மாணவர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி நேரடி உரையாடல்!

    முன்னதாக, மு.க.ஸ்டாலினை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். அப்போது வணக்கம் என்று சோனியாகாந்தி தமிழில் கூறினார். இதனைத் தொடர்ந்து, இருவரும் பரஸ்பரம் உடல்நலன் குறித்து விசாரித்துக் கொண்டனர்.

    Read More : நீட் குறித்து பேசினோம்.. மனநிறைவு, மகிழ்ச்சி: பிரதமர் மோடி உடனான சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து

    இந்நிலையில், இன்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழ்நாட்டிற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்தும், ஜி.எஸ்.டி. தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்நிலையில், நாளை மாலை டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: CM delhi visit, DMK, MK Stalin, Nirmala Sitharaman

    அடுத்த செய்தி