டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்

இதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளார்.

 • Share this:
  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கிறார்.

  நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களைக் கைப்பற்றிய ஆட்சி அமைக்க தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து, தமிழக முதல்வராக மே.7ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார். முதல்வராகப் பதவி ஏற்பவர்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்திப்பது வழக்கம். எனினும், மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நிலையில் அரசு இருப்பதால் வேறு பணிகள் எதிலும் அரசு ஈடுபடவில்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தடுப்பூசி தட்டுப்பாடு, ஆக்சிஜன் தேவை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துப் பிரதமருக்கு முதல்வர் என்கிற முறையில் ஸ்டாலின் கடிதம் எழுதினார். சமீபத்தில் மாநிலங்களுக்குத் தடுப்பூசி இலவசம் என அறிவித்ததை வரவேற்றும் கடிதம் எழுதியிருந்தார்.

  இந்நிலையில், தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக நாளை டெல்லி சென்று பிரதமரை சந்திக்கிறார். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு சந்திப்பு நடைபெறுகிறது. அதில், கொரோனா தடுப்பு பணி, கரும் பூஞ்சை மருந்து தேவை, தடுப்பூசி தேவை, நீட் விலக்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Also read: தமிழகத்தில் கொரோனா 3வது அலை வர வாய்ப்பு; குழந்தைகள் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு!

  இதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டுச் செல்ல உள்ளார். பிரதமர் உடனான சந்திப்புக்கு பின் 18ம் தேதி காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தியையும் மு.க.ஸ்டாலின் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், திமுக எம்பிக்களை டெல்லி வர அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி,ஆர்,பாலு வாய்மொழி உத்தரவிட்டுள்ளார். மு.க.ஸ்டாலினுக்கு டெல்லி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அக்கட்சியின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் டெல்லிக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது.
  Published by:Esakki Raja
  First published: