மீனவர்கள் விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்களை 2 விசைப்படகுகளுடன் கடந்த 12ஆம் தேதி இலங்கை கடற்படை சிறைபிடித்து சென்றதை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஒரு மாத காலத்துக்குள் இலங்கையைச் சேர்ந்த சிலராலும், கடற்படையாலும் மூன்றாவது முறையாக இந்திய மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக தெரிவித்துள்ள முதலமைச்சர்,இந்த விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்துக்கு வெளியுறவு அமைச்சர் கொண்டு சென்ற போதிலும், தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.
மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகள் நிரந்தரமாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும் பிரதமர் உடனே தலையிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இலங்கையால் விடுவிக்கப்பட்டுள்ள 6 மீன்பிடிப் படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களுடன், 102 மீன்பிடி படகுகளையும் விடுவிக்கத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, MK Stalin, Narendra Modi, PM Modi