• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வருவாய்த்துறையின் 3 வலைதள சேவைகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வருவாய்த்துறையின் 3 வலைதள சேவைகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வலைதளம் மூலம் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்வற்றின் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வருவாய்த்துறையில் உள்ள வருவாய் நிருவாக ஆணையரகம் மற்றும் துணை ஆட்சியர்களுக்கான பிரத்தியேக வலைதளம், கிராம நிருவாக அலுவலர்களுக்கான மாவட்ட மாறுதல் வலைதளம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

மாநில அரசால் அறிவிக்கப்படும் வருவாய் துறையின் சமூக பாதுகாப்புத் திட்டங்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டங்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பயன்படும் சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்கள் போன்வற்றின் விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் www.cra.tn.gov.in என்ற பிரத்தியேக இணைய தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் அரசாணைகள், அரசு திட்டங்களின் விவரங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசின் குடிமைப் பணியின்கீழ் பணிபுரியும் அலுவலர்களின் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்ய துணை ஆட்சியர்களுக்கான www.cra.tn.gov.in/tnscs என்ற பிரத்தியேக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் துணை ஆட்சியர்கள், அரசு விதிகள், சட்டங்கள், அரசால் வெளியிடப்படும் அரசாணைகள், வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றறிக்கைகள், பணிமாறுதல் மற்றும் பணி நியமனங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

கிராம நிர்வாக அலுவலர்களின் கோட்ட, வட்டம் மற்றும் மாவட்ட அளவிலான பணி மாறுதல்கள் தொடர்பான கோரிக்கைகளை பரிசீலித்து, காலதாமதமின்றியும், வெளிப்படை தன்மையுடனும் செயல்படுத்தும் வகையில் www.cra.tn.gov.in/vaotransfer என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Must Read :  மயக்க ஊசி செலுத்தியும் தப்பியோடிய T23 புலி : நம்பிகுன்னு வனப்பகுதியில் தீவிர தேடுதல் பணி

இந்த மூன்று வலைதளங்களையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை  தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதில் தலைமைச் செயலாளர் இறையண்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்தர ரெட்டி, வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: