192 நாடுகள் பங்கேற்கும் பல்தொழில் கண்காட்சி துபாயில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு அரசு கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் உள்ளிட்ட அரங்குகள் இடம்பெற உள்ளன. இந்த அரங்குகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக நாளை மாலை 4.30மணிக்கு தனி விமானத்தில் துபாய் செல்லும் முதலமைச்சர், சார்ஜாவில் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். அங்கு தமிழக முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது.
அங்கு சர்வதேச தொழில் முதலீட்டாளர்களை சந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில் புதிய தொழில் தொடங்க பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலீட்டை ஈர்க்க முதன்முறையாக முதல்வர் ஸ்டாலின் மேற்கொள்ளும் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Must Read : பாவம் விடுங்க சார் கொறடா பற்றி பேசட்டும் - துரைமுருகன் பேச்சால் அவையில் சிரிப்பலை
இந்தப் பயணத்தில் முதலமைச்சருடன் மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் தனி செயலர்கள் உதயச்சந்திரன், உமாநாத், அனுஜார்ஜ் உள்ளிட்டோரும் பயணம் மேற்கொள்ள உள்ளனர். தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் தமிழகம் திரும்புகிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.