ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''மழையை சமாளிக்க ரெடி.. நாளைக்கு சீர்காழி போறேன்'' - ஆய்வின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின்

''மழையை சமாளிக்க ரெடி.. நாளைக்கு சீர்காழி போறேன்'' - ஆய்வின் போது பேசிய முதல்வர் ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

நேற்று ஒரே நாளில் சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Sirkali (Sirkazhi), India

  வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்துவருகிறது.

  நேற்று ஒரே நாளில் சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சீர்காழி சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தற்போது கொளத்தூரில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று இரவு சாலை மார்க்கமாக சிதம்பரம் செல்லும் முதலமைச்சர் நாளை சீர்காழி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார்.

  இந்நிலையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தெரிவித்தார். மேலும், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் சென்னை மாநகராட்சியும் அரசும் தயார், அனைத்து நடவடிக்கையும் முன்கூட்டியே எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய அவர், மழைக் குறித்து எதிர்கட்சி விமர்சனம் இருக்கட்டும் பொதுமக்கள் பாராட்டினால் போதும் என கூறினார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: CM MK Stalin, MK Stalin, Northeast monsoon, Rain