• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

மு.க.ஸ்டாலின் ஆய்வு

சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், லிப்ட் அமைக்கும் பணிகள் முதலியவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

  • Share this:
    சென்னை மெட்ரோ ரயில் நிலைய திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். சென்ட்ரல், கிண்டி ஆகிய இடங்களில் ஆய்வு செய்த முதலமைச்சர், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே அமைய இருக்கும் மெட்ரோ ரயில் நிலைய பணிகளை பார்வையிட்டார் அவர், அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை சுமார் 20 நிமிடம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை விமான நிலையத்தில் இருந்து அண்ணாசாலை, சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோ நகர் வரை ஒரு வழித்தடத்திலும்; விமான நிலையத்தில் இருந்து மற்றொரு மார்க்கமாக ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல் வழியாக திருவொற்றியூர் விம்கோ நகருக்கு மெட்ரோ ரயில்கள் சென்று வருகின்றன.

    அதன்படி, மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 23 கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்திலும், 22 கிலோ மீட்டர் வழித்தடம் மேம்பாலத்திலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. அதன்படி 2ஆம் கட்டமாக 3 வழித்தடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட திட்டமிடப்பட்டது.

    அதன்படி, மாதவரம்- சிறுசேரி சிப்காட் வரை ஒரு வழித்தடத்திலும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடத்திலும், மேலும் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை வழித்தடத்திலும் இயக்குவதற்கான பூர்வாங்க பணிகள் சென்னையின் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து சென்ட்ரல் வந்த முதலமைச்சர், அங்கு நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்ட பணிகளை பார்வையிட்டார். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள், லிப்ட் அமைக்கும் பணிகள் முதலியவற்றை ஆய்வு செய்தார். அப்போது, அதிகாரிகள் அவருக்கு அங்கு நடைபெறும் பணிகள் குறித்து விளக்கினர்.

    Must Read : குயின்ஸ்லேண்டு நிலம் நீதிமன்ற வழிகாட்டுதல் படி மீட்கப்படும் - அமைச்சர் சேகர்பாபு

    பின்னர், அங்கிருந்து கிண்டி கத்திப்பாராவில் நடைபெற்று வரும் நகர்ப்புற சதுக்கம் மற்றும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை அருகே மெட்ரோ ரயில் நிலைய திட்ட பணிகளை ஆய்வு செய்தார். அங்கு அமைய இருக்கும் தெள்ளியகரம் மெட்ரோ ரயில் நிலைய பணிகளை பார்வையிட்டார். அங்கு நடைபெறும் கட்டுமான பணிகளை சுமார் 20 நிமிடம் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: