ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு..

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Weather update | மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai [Madras] | Chennai | Tamil Nadu

  சென்னை எழிலகத்தில் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

  தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும்  என  சென்னை  வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை கடந்த 29-ம் தேதி தொடங்கிய நிலையில், தமிழகத்தில் மழை தீவிரமடைந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் தொடர்ந்து 3 நாட்களாக பெய்து வரும் மழையால், சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலரது வீட்டிற்குள் மழை நீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் வேதனையடைந்துள்ளனர்.

  இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை  எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களிடம் இருந்து வந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதில், முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனும் உடன் இருந்தனர்.

  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, Heavy rain, MK Stalin, Weather News in Tamil