ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

‘ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு’ : ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு’ : ஏற்றுமதி மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

ஏற்றுமதி மாநாடு

ஏற்றுமதி மாநாடு

காஞ்சி ஆரணி பட்டு சேலைகள், திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிக பெரிய வரவேற்பு உள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய சுதந்திர தின விழாவின் 75ஆவது வருடத்தை முன்னிட்டு தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற, ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு எனும் ஏற்றுமதி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும் பரந்துள்ளது என்றும், உலகம் நோக்கி நாம் செல்ல வேண்டும், உலகம் நம்மை நோக்கி வர வேண்டும் என்றும் கூறினார்.

  மாநாட்டில் பேசிய முதலமைச்சர், ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு - ஏற்றுமதியில் ஏற்றம் பெற்று இந்தியாவில் முன்னணியில் சென்று கொண்டிருகிறது தமிழகம். தொழில் துறை வளர்கிறது என்றால் அனைத்து துறைகளும் வளருகிறது என்று பொருள். அனைத்து மாவட்டங்களிலும் இது போன்ற கண்காட்சிகள் நடத்த அமைச்சர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. 2120 கோடி மதிப்பில் 24 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடபட்டுள்ளன. 41,695 பேருக்கு வேலைவாய்பு கிடைக்கும்.

  ஏற்றுமதியாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் அனைத்து ஆதரவுகளையும் தமிழக அரசு வழங்கும். தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்தியா முழுவதும் பரந்து உள்ளது. உலகம் நோக்கி நாம் செல்ல வேண்டும் உலகம் நம்மை நோக்கி வர வேண்டும். 1.93 லட்சம் ஏற்றுமதியில் இந்தியாவில் 3ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்களுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது.

  காஞ்சி ஆரணி பட்டு சேலைகள் , திண்டுக்கல் பூட்டு, சிறுமலை வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களுக்கு வெளிநாடுகளில் மிக பெரிய வரவேற்பு உள்ளது. இவற்றை அதிக அளவில் தயாரித்து. தரம் பாதிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு தலைமை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் ஏற்றுமதியை மையமாக கொண்ட பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

  ஏற்றுமதி தொடர்பான இடர்பாடுகளை களைய ஏற்றுமதி அமைப்பு ஒரு உருவாக்கப்பட்டுள்ளது. திருப்பூர் கரூர் ஆம்பூர் சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள ஏற்றுமதி இடங்கள் மேம்படுத்தபடும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

  இந்நிலையில், இந்த மாநாட்டில் கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகங்கள் மற்றும் நிறுவனங்கள் தமது பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றன. இந்தக் கண்காட்சி பொது மக்களுக்காக செப்டம்பர் 22, 2021 (இன்று) மாலை 2.00 மணி முதல் 5.00 மணி வரை திறந்து இருக்கும்.

  Must Read : 5 சவரனுக்கு உட்பட்ட கூட்டுறவுவங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் இல்லை

  தொடக்க விழாவில் முதலமைச்சர் ‘தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை’ மற்றும் ‘குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு’ ஆகியவற்றை வெளியிட்டார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Suresh V
  First published:

  Tags: Export, MK Stalin