தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்தநாள் சமூக நீதி நாளாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,
சென்னை அண்ணா சாலையில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்தநாள் தினத்தை சமூக நீதி நாளாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழி ஏற்பு விழா நடைபெற்றது. இதில், ‘சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி வாசிக்க அமைச்சர்கள், அதிகாரிகள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் உறுதிமொழி ஏற்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் வேங்கடநாயக்கருக்கும், சின்னத்தாய்யம்மையாருக்கும் 1979ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மகனாகப் பிறந்தார் பெரியார். இளம் வயதிலேயே ஊர் கட்டுப்பாடுகளை மீறி, சாதி மறுப்பு திருமணம் செய்துவைத்தார். பெரியாரின் சடங்கு, சம்பிராதாயங்கள் மீதான விமர்சனத்தின் காரணமாக அவரின் தந்தையுடன் முரண்பாடு ஏற்பட்டதால் வீட்டை விட்டு வெளியேறி காசிக்குச் சென்றுவிட்டார்.
காசிக்கு சென்ற அவருக்கு சடங்கு, சம்பிரதாயங்கள், பண்பாடு நடைமுறைகள் எல்லாம் குறிப்பிட்ட ஓர் சமுதாயத்திற்கு ஆதரவாக இருப்பதாக உணர்ந்தார். பின்னர், தமிழ்நாடு திரும்பிய அவர் அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கினார். காந்தியை தலைவராக ஏற்று காங்கிரஸில் தன்னை இணைந்துக் கொண்டார். பின்னர், 1925ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தமிழ் மாகாண மாநாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படாததால், காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்காது என்று கருதி காங்கிரஸிலிருந்து விலகினார்.
சமூக நீதிக்காக தன் வாழ்நாள் முழுவதும் போராடினார் பெரியார். அவரது இறுதி மூச்சுவரை பெண் விடுதலை, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை, சுயமரியாதை உள்ளிட்டவற்றிக்கு தொடர்ந்து குரல் கொடுத்துவந்தார். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் உருவாவதற்கு மூல வித்தாக இருந்தவர் பெரியார்.
Must Read : பெரியாரின் அரசியலிலும் தொண்டிலும் தவிர்க்க முடியாத திருச்சி!
அதனால், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரபலங்களும் மக்களும் பெரியாரின் படத்திற்கும், சிலைகளுக்கும் மாலை அணிவித்தும், மலர்களைத் தூவியும் ஆங்காங்கே மரியாதை செலுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.