Home /News /tamil-nadu /

அதிகம் பேசுவதை தவிர்த்து செயலாற்றி வருகிறேன் - திருமண விழாவில் முதல்வர் பேச்சு!

அதிகம் பேசுவதை தவிர்த்து செயலாற்றி வருகிறேன் - திருமண விழாவில் முதல்வர் பேச்சு!

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

  • News18
  • Last Updated :
    அதிகம் பேசுவதைத் தவிர்த்து அதிகமாக செயலாற்றி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் இல்ல திருமண விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக மாநிலக்களவை குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

    Also read... நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் எஸ்.சி, எஸ்.டிக்கு இடஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!

    விழாவில் மணமக்களை வாழ்த்திப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் அதிகம் பேசமாட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியதற்கு, தான் அதிகம் செயலாற்ற விரும்புவதால் அதிகம் பேசுவதில்லை என பதிலளித்தார்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: MK Stalin

    அடுத்த செய்தி