முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜலதோஷம் காரணமாக ஓய்வில் இருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை, டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாதெமியில் "The Man who would not be king - V. P. Raman" என்ற சுயசரிதை புத்தக வெளியிட்டு விழா நடந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், பி.எஸ்.ராமன், ப.சிதம்பரம், அமைச்சர் துரைமுருகன், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் சீனிவாசன், நடிகர்கள் ரஜினிகாந்த, அரவிந்த்சாமி, இயக்குனர் மணிரத்னம், செல்வராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முதலமைச்சர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மருத்துவர்களின் பரிந்துரைப்படி அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தெரிவித்த துரைமுருகன், முதல்வரின் உரையை துரைமுருகனே வாசித்தார்.
துரைமுருகன் வாசித்த முதல்வர் உரையில், வி.பி.ராமன் குடும்பம் லாயிட்ஸ் கார்னர் என்று சொல்லித்தான் பழக்கம். நாங்களும் கோபாலபுரம் பகுதியில் வசிக்க கூடியவர்கள் தான்.
இப்படி ஒரு சுயசரிதை நூலை வி.பி.ராமன் எழுதியிருந்தால், அதனை அப்போது கலைஞரே வெளியிட்டு இருப்பார். தற்போது அவரது மகன் எழுதியுள்ளதால், கலைஞரின் மகனான நான் வெளியிடும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.
மகுடம் மருத்துவராக இருந்தாலும், வாழ்நாள் முழுவதும் முடிசூடா மன்னனாக இருந்து மறைந்தவர் வி.பி.ராமன். பேரறிஞர் அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் வி.பி.ராமன் சென்றது இந்த நூலில் பதிவிடப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக தோல்விக்கு இபிஎஸ் செயல்களே காரணம்.. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நாளிதழ்களில் விளம்பரம்
எம்ஜிஆர் வி.பி.ராமனை அவரது கட்சியில் சேர அழைத்த போது, அவர் சேரவில்லை. அதற்கான காரணத்தை பி.எஸ்.ராமன் இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார், என முதல்வரின் உரையை துரைமுருகன் வாசித்தார்.
தொடர்ந்து, மேடையில் வரவேற்புரை வழங்கிய இயக்குனர் செல்வராகவன், சிறுவயது முதலே எனக்கு மு.க.ஸ்டாலினை மிகவும் பிடிக்கும், இப்படிப்பட்ட ஒரு முதல்வர் வரமாட்டாரா என்று நெடுநாள் மக்கள் ஏங்கியிருந்தார்கள். மக்கள் முதல்வர் என்றால் அது மு.க.ஸ்டாலின் தான். தமிழ்நாடு உலகிலேயே ஒரு சிறந்த வளர்ந்த மாநிலமாக வளர வேண்டுமென்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தான் முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய உச்சநீதிமன்ற நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ஒரு மனிதன் செய்த சாதனையை அவரது வாழ்க்கை வரலாற்றை படித்து தெரிந்து கொள்வதை விட, எத்தனை பேருடைய வாழ்க்கை வரலாற்றில் அந்த மனிதன் சம்பந்தப்பட்டுள்ளார் என்பதை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பலருடைய வரலாறுகளை எழுதும்போது அதில் வி.பி.இராமன் வரலாறு நிச்சயம் இருக்கும். அவர் மார்க்ஸ் துவங்கி பெரியார் வரை தன் வாழ்க்கையில் பயணித்திருக்கிறார், என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Duraimurugan