Home /News /tamil-nadu /

தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

தஞ்சாவூர் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின் - மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

Thanjavur : தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழப்பு. மேலும் 15 பேர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நேற்று இரவு நடைபெற்றது. அப்போது, தேரை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு நேரில் செல்கிறார். அங்கு முதலமைச்சர் நேரில் அஞ்சலி செலுத்துகிறார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்க உள்ளார்.

    இந்நிலையில், இந்த துயரமான சம்பவத்தை கேள்வியுற்று மிகவும் வேதனை அடைந்ததாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு


    Must Read : அரசுப் பள்ளிகள்தான் நம்முடைய சொத்து- பள்ளி மாணவர்களின் செயல் குறித்து டி.ஜி.பி சைலேந்திர பாபு வேதனை வீடியோ

    இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயை, முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
    Published by:Suresh V
    First published:

    Tags: MK Stalin, Thanjavur

    அடுத்த செய்தி