ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Ondriya Arasu : ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக நயினார் நாகேந்திரன் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

Ondriya Arasu : ஒன்றிய அரசு என அழைப்பது ஏன்? பாஜக நயினார் நாகேந்திரன் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இதுபற்றி பேசியிருக்கிறார். ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஒன்றியம் என்ற வார்த்தையைக் கேட்டு யாரும் மிரளத் தேவையில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் கூட்டாட்சித் தத்துவம் உள்ளது. அதனால் பயன்படுத்தினோம், பயன்படுத்துவோம், பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்று கூறினார்.

  பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், மத்திய அரசை, ஒன்றிய அரசு என கூறவது ஏன் என முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என கோரினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், “ஒன்றிய அரசு (Ondriya Arasu) என கூறுவதை குற்றமாக கருத வேண்டாம், நமது அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டதை தான் நாங்கள் சொல்கிறோம். சட்டத்தில் இல்லாததை நாங்கள் பயன்படுத்தவில்லை.

  அண்ணா, கலைஞர் கூறாததை நாங்கள் சொல்வதாக விமர்சிக்கின்றனர். 1963ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா இதுபற்றி பேசியிருக்கிறார். ஒன்றியம் என்ற வார்த்தையை பார்த்து யாரும் மிரள தேவையில்லை. இதை நாங்கள் தொடர்ந்து பயன்படுத்துவோம். இது கூட்டாட்சி தத்துவத்தை பிரதிபலிப்பது” என்று கூறினார்.

  Must Read : கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - இனிக்கோ இருதய ராஜ் கோரிக்கை

  அப்போது, இந்தியாவில் இருந்து பிரிந்தது தான் மாநிலங்கள் என நயினார் நாகேந்திரன் கூறியதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்தியாவில் இருந்து மாநிலங்கள் பிறியவில்லை. எல்லோரும் ஒன்றிணைந்து உருவாக்கியது தான் இந்தியா என விளக்கமளித்தார்.

  Published by:Suresh V
  First published:

  Tags: DMK, MK Stalin, TN Assembly