ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000..? முக்கிய ஆலோசனையில் முதலமைச்சர்!

பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000..? முக்கிய ஆலோசனையில் முதலமைச்சர்!

மாதிரி படம்

மாதிரி படம்

Pongal 2023 Gift | பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பொங்கல் பரிசுத் தொகை வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை  மேற்கொண்டு வருகிறார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்புத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2023 பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு என்னென்ன பொருட்கள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர் சக்கரபாணி மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றுள்ளனர். பொங்கல் பரிசுத் தொகையாக குடும்ப அட்டைதாரருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க | பொங்கல் பரிசு தொகுப்பு... ரேஷன் அட்டைதாரர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி

ஆலோசனை கூட்டத்திற்கு பின் பொங்கல் தொகுப்பு மற்றும் பரிசுத் தொகை குறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

First published:

Tags: CM MK Stalin, Pongal 2023, Pongal Gift, Ration card