Home /News /tamil-nadu /

உதகையில் மீண்டும் பழங்குடியின மக்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் நடனம்

உதகையில் மீண்டும் பழங்குடியின மக்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் நடனம்

முதல்வர் மு.க ஸ்டாலின் நடனம்

முதல்வர் மு.க ஸ்டாலின் நடனம்

அழிந்து வரும் எருமை இனங்களை பாதுகாக்கும் விதமாக ஒரு கோடி மதிப்பில் அமைக்கபடும் எருமை அபிவிருத்தி மையத்திற்கான இடத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

உதகை அருகே உள்ள தோடர் பழங்குடியின மக்களின் கிராமத்திற்கு நேராக சென்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர்களுடன் இணைந்து நடனமாடினார்.

நீலகிரி மாவட்டம் உதகையில் 124-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 19-ந்தேதி உதகைக்கு வந்தார். 20-ந்தேதி காலையில் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்று அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து நேற்று ஜான்சலீவன் சிலை திறப்பு, உதகை 200 துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை உதகை அருகே கூடலூர் சாலையில் உள்ள பகல்கோடு மந்து என்ற  தோடர் பழங்குடியின கிராமத்திற்கு சென்றார். அங்கு உள்ள தோடர் இன மக்களின் பாரம்பரிய கோவிலை பார்வையிட்டார். பின்னர் அழிந்து வரும் எருமை இனங்களை பாதுகாக்கும் விதமாக ஒரு கோடி மதிப்பில் அமைக்கபடும் எருமை அபிவிருத்தி மையத்திற்கான இடத்தையும் நேரில் ஆய்வு செய்தார்.



அப்போது மழை பெய்ய துவங்கியது. எனினும் மழையிலேயே தோடர் பழங்குடியின மக்களின் வீடுகளை பார்த்ததுடன் அவர்களின் குறைகளை தனி தனியாக கேட்டறிந்தார். அப்போது தோடர் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் இதுவரை மண் சாலைகள் மட்டுமே இருந்து வருகின்றன எனவும், அதை தார் சாலைகளாக அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

வனப்பகுதியில் மேய்ச்சல் நிலங்களில் வனத்துறையினர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிப்பதில்லை. அந்த தடையை நீக்க வேண்டும். ஈரப்பதத்தை அதிகமாக உறிஞ்சும் கற்பூர சீகை மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.



இந்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் மற்றும்  ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோருக்கு அறிவுறுத்தினார். பின்னர் தோடர் பழங்குடி இன மக்களுடன் இணைந்து அவர்களின் பாரம்பரிய நடனத்தை முதல்வர் ஸ்டாலினும் ஆடினார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: CM MK Stalin, MK Stalin

அடுத்த செய்தி