முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95) உடல்நலக்குறைவால் தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் அடையாததால் நேற்று இரவு மருத்துவமனையில் இருந்து பெரியகுளத்தில் உள்ள ஓ.பி.எஸ்-ன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் அவரது இல்லத்தில் நேற்று இரவு உயிரிழந்தார். விவரம் அறிந்த ஓ.பி.எஸ் சென்னையில் இருந்து தேனி சென்றார். உடல்நலக்குறைவால் உயிரிழந்த தனது தாயாரின் முகம் பார்த்தும் காலை பிடித்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம்.
முன்னாள் முதலமைச்சர் அண்ணன் @OfficeOfOPS அவர்களின் தாயார் பழனியம்மாள் அவர்கள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன்.
ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) February 24, 2023
இந்த நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர், “முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ. பன்னீர்செல்வம் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் திரு. பன்னீர்செல்வம் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, O Pannerselvam, OPS, Theni