• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மறைவு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

ஓபிஎஸ்-க்கு ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

  • Share this:
    அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. உடல்நலக்குறைவால் கடந்த சில தினங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஜயலட்சுமி இன்று காலை உயிரிழந்தார்.

    இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்னர், ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் கூறினார். முன்னதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

    இந்நிலையில், “அதிமுக ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவருமான, அண்ணன் திரு ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் துணைவியார் திருமதி விஜயலட்சுமி அவர்கள், மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இல்லத்துணையைப் பிரிந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    அதேபோல, ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இறப்பிற்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் துணைத்தலைவருமான சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி திருமதி.விஜயலட்சுமி உடல்நலக் குறைவால் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.

    அவரை இழந்து வாடும் அண்ணன் .ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு சகோதரியின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.



    Read More : ஓ.பன்னீர்செல்வம் மனைவி மாரடைப்பால் மரணம்

    இதேபோல அரசில் கட்சி பிரமுகர்களும், கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சு உடலுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: