கொரோனா பரவல் : சட்டமன்ற கட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

மு.க.ஸ்டாலின்

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது தொடர்பாக ஆலோசிக்க, அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு ஆலோசனைகள் வழங்க அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்றும், ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா இருவர் பங்கேற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: