சென்னை,
காஞ்சிபுரம்,
திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதாலும்
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இரண்டு/ மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்பும்படி முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. மழையால் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், புழல் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை மற்றும் நிவாரணப் பணிகள்தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ள உத்தரவில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1ம் தேதியில் இருந்து நவம்பர் 7ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 334.64 மி.மீ. பெய்துள்ளது என்றும் இது இயல்பான அளவான 232.8 மி.மீட்டரை விட 44 சதவீதம் கூடுதல் என்றும் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர், திருநெல்வேலி, அரியலூர், திருவாரூர், விழுப்புரம், ஈரோடு, கரூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய 10
மாவட்டங்களில் இயல்பை விட 60 சதவீதத்திற்கு மே மிக
அதிகப்படியான மழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும் அனைத்து மாவட்டங்களில் 5,106 நிவாரண முகாம்களும் பெருநகர சென்னைமாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 160 நிவாரண முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் நாளை மறுநாளும்
விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வேகமாக நிரம்பும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதாலும், இந்த மாவட்டங்களில் அமைந்துள்ள அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்படுவதாலும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றுள்ள பொதுமக்கள் இரண்டு,மூன்று நாட்கள் கழித்து சென்னைக்கு திரும்புமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் படிங்க: வேகமாக நிரம்பும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள்... கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.