• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பாராட்டு

களத்தில் நின்ற பணியாளர்களை வைத்து மீட்பு நடவடிக்கையை ராஜேஸ்வரி செய்திருக்கலாம். ஆனால், அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு காரணமாக அவரே களத்தில் இறங்கினார்.

  • Share this:
    அர்ப்பணிப்பு மிக்க சேவையால் மக்கள் உள்ளங்களை கவர்ந்த காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியை,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நேற்று கொட்டும் மழைக்கிடையே, போலீசார், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்டோர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மழையில் நனைந்து, உடல் நலம் குன்றிய உதயா என்ற இளைஞர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    அவரைப் பார்த்த டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, அலேக்காக இளைஞரை தோளில் தூக்கி ஓடிச்சென்று ஆட்டோவில் ஏற்றி, மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார். மீட்பு பணி நடக்கும் இடத்தில் சில பணியாளர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வைத்து, இந்த நடவடிக்கையை ராஜேஸ்வரி செய்திருக்கலாம். ஆனால், அர்ப்பணிப்பு, பணி ஈடுபாடு காரணமாக அவரே களத்தில் இறங்கி மீட்பு நடவடிக்கை செய்தார்.




    ராஜேஸ்வரியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகியது. மேலும், மற்ற இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்போருக்கு ஒரு உத்வேகத்தையும் அளித்தது. நேற்றே முதல்வர் ஸ்டாலின், காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.


    இந்த நிலையில் ராஜேஸ்வரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்ததோடு, சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: