அமைச்சரின் பேச்சால் சங்கடம்.. சட்டப்பேரவையில் மன்னிப்பு கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நிதியமைச்சர் பயன்படுத்திய குறிப்பிட்ட வார்த்தையை சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர்.

 • Share this:
  தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பயன்படுத்திய ஒரு வார்த்தைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார்.

  தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது.  நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் சட்டமன்றத்தில் நேற்று நடந்தது. அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ கே.பி முனுசாமி, “ திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் பெட்ரோல் விலை மட்டும்  3ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

  அப்போது குறுக்கிட்ட நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், 2011 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை ஐந்து முறை உயர்த்தப்பட்டது. ஆனால் ஒருமுறை கூட விலை குறைக்கப்படவில்லை என பதிலளித்தார். அப்போது நிதியமைச்சர் சட்டப்பேரவையில் ஒரு வார்த்தையை பயன்படுத்தினார். அதற்கு கண்டனம் தெரிவித்த அதிமுகவினர் அந்த குறிப்பிட்ட வார்த்தையை சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கவேண்டும் என வலியுறுத்தினர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அப்போது நிதியமைச்சரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு கருத்தை கூறினார். உடனடியாக ஆவேசமாக எழுந்த நிதியமைச்சர், நான் தனிநபரை பற்றி கூறவில்லை. எதிர்க்கட்சி தலைவர் திசை திருப்பும் வகையில் பேச வேண்டாம். நான் யாரையும் அவமதிக்கவில்ல்லை என்றார். இந்த வார்த்தை மோதல்களினால் அவையில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.

  அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நிதியமைச்சர் பயன்படுத்திய வார்த்தைக்கு உள்ளபடியே வருந்துகிறேன். அந்த வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றார். இதனையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, நிதியமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: