• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பலியான காவலர் கவிதா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தலைமை செயலகத்தில் மரம் விழுந்து பலியான காவலர் கவிதா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தலைமை காவலர் கவிதா

தலைமை காவலர் கவிதா

 தலைமை செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்ததில்,  போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா உயிரிழந்தது வேதனையை அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

  • Share this:
    சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர்  தனிப்பிரிவு அருகேயுள்ள மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில்  பலியான பெண் காவலர் கவிதாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் நிவாரண தொகை அறிவித்துள்ளார்.

    அரக்கோணத்தை சேர்ந்தவர் கவிதா(41). 2005ஆம் ஆண்டு பேட்ச் காவலரான இவர் தற்போது முத்தியால்பேட்டை போக்குவரத்து பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பாதுகாப்பு பணிக்காக இன்று தலைமைச் செயலகம் வந்த இவர் முதலமைச்சர் தனிப்பிரிவு அலுவலகம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது, தொடர் மழையின் காரணமாக 75 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த தூங்குமூஞ்சி மரம் காவலர் கவிதா மீது சாய்ந்து விழுந்தது. இதில் கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த N1 ராயபுரம் போக்குவரத்து தலைமை காவலர் முருகன் என்பவர் லேசான காயங்களுடன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 108 வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

    உயிரிழந்த பெண் காவலர் கவிதாவுக்கு குடும்பத்தினருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  தலைமை செயலக முதலமைச்சர் தனிப்பிரிவு கட்டிடத்தின் அருகில் உள்ள பழமை வாய்ந்த பெரிய மரம் மழையின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்ததில்,  முத்தயால் பேட்டை போக்குவரத்து காவல்நிலைய தலைமைக் காவலர் கவிதா மரத்தினடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயர் செய்தியைக்கேட்டு  மிகுந்த மன வருத்தமடைந்தேன்.

     

    இதையும் படிங்க: தலைமை செயலகம்: மரம் வேரோடு சாய்ந்து விழுந்து பெண் காவலர் பலி!


    பணியிலிருக்கும்போது உயிரிழந்த தலைமைக் காவலர் கவிதாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மேற்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த கவிதாவின் குடும்பத்தாருக்கு உடனடியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: வீடுவீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடக்கம் - மா.சுப்பிரமணியன்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: