ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஒரே நிகழ்வில் பங்கேற்றும் சந்தித்துக்கொள்ளாத மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி

ஒரே நிகழ்வில் பங்கேற்றும் சந்தித்துக்கொள்ளாத மு.க.ஸ்டாலின் - மு.க.அழகிரி

மு.க. தமிழரசுவின் மாமியார் உடல் வைக்கப்பட்டிருந்த இல்லத்தில் சுமார் 45 நிமிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது சகோதரர் மு.க.அழகிரி அழகிரி ஆகியோர் இருந்தனர். எனினும், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்திக்கொள்ளவில்லை.

  • 1 minute read
  • Last Updated :

மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி  நேற்று காலமான நிலையில் கோவை வடவள்ளியில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் முதல்வரின் சகோதரர் மு.க.அழகிரியும் இருந்தார். எனினும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரர் அழகிரியும் சந்தித்துக்கொள்ளவில்லை.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் மகனும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி நுரையீரல் பிரச்சினை, மூச்சுத்திணறலால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை காலமானார். கோவை வடவள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று விமானம் மூலம் காலை 10 மணிக்கு கோவை வந்தார்.

முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின்  அண்ணன் அழகிரி துக்க நிகழ்வுக்கு வந்திருந்து ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கேயே இருந்தார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வந்தார்.  ஜெயலட்சுமியின் உடலுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். அவருடன் உதயநிதி ஸ்டாலின் , சகோதரி செல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.  அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், முத்துச்சாமி, பெரியகருப்பன், வெள்ளகோவில் சாமிநாதன், மெய்யநாதன், காந்தி, மற்றும் முரசொலி செல்வம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

மு.க.அழகிரி

ஐஜி சுதாகர், டிஐஜி முத்துச்சாமி, எஸ்பி செல்வநாகரத்தினம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அஞ்சலி செலுத்த வந்த போது மு.க அழகிரி அதே வீட்டின் வளாகத்தில் இருந்தார். முதல்வர், மு.க அழகிரி இருவரும் ஒரே இடத்தில் இருந்ததால் அவர்கள் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் கார்களில் மாறி மாறிச் சென்று தப்பித்தார் - போலீசார் தகவல்

எனினும் இருவருக்கும் இடையே சந்திப்பு நிகழவில்லை. மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரி ஆகியோர் ஒரே வீட்டில் 45 நிமிடங்கள் இருந்தபோதும் அவர்கள் சந்தித்துக்கொள்ளாமலே சென்றனர்.

First published: