ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வடகிழக்கு பருவமழை ஆய்வுக்கூட்டம்... அதிகாரிகளுக்கு முதல்வர் விடுத்த 10 முக்கிய உத்தரவுகள்?

வடகிழக்கு பருவமழை ஆய்வுக்கூட்டம்... அதிகாரிகளுக்கு முதல்வர் விடுத்த 10 முக்கிய உத்தரவுகள்?

முதலமைச்சர் முக ஸ்டாலின்

முதலமைச்சர் முக ஸ்டாலின்

தொலைபேசி மூலமாகவோ - வாட்ஸ்அப் வழியாகவோ வரக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுங்கள். அதிகாரிக்கு அனுப்பினோம், உடனே சரிசெய்து கொடுத்தார்கள் என்று பொதுமக்கள் சொல்வதுதான், மிகப்பெரிய பாராட்டாக இருக்க முடியும் என மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu | Chennai [Madras] | Chennai

  “தொலைபேசி மூலமாகவோ - வாட்ஸ்அப் வழியாகவோ வரக்கூடிய கோரிக்கைகளை உடனடியாக நிவர்த்தி செய்யுங்கள். அதிகாரிக்கு அனுப்பினோம், உடனே சரிசெய்து கொடுத்தார்கள் என்று பொதுமக்கள் சொல்வதுதான், மிகப்பெரிய பாராட்டாக இருக்க முடியும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, முதலமைச்சர் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

  ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, அவர்களுக்குத் தரமான உணவு, குடிநீர், மின்சாரம், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
  மழைக்காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும், வருவாய்த்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை, வேளாண் துறை ஆகிய பல்வேறு துறை அலுவலர்களும் தனித்து இயங்காமல் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  ஒவ்வொரு நிவாரண முகாமிற்கும் ஒவ்வொரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்படவேண்டும். பொதுத் தொலைபேசி எண்களை பரப்ப வேண்டும். நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். பேரிடர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மின் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும். 
  பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  பழுதடைந்த பலவீனமான சுற்றுச் சுவர்களை அப்புறப்படுத்த வேண்டும். தொலைபேசியிலோ,வாட்ஸ்அப்பிலோ வரக்கூடிய புகார்களை உடனே நிவர்த்தி செய்ய வேண்டும்.
  வயல்வெளிகளில் பயிர் சேதம் ஏற்படாத வகையில் மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
  மாநகர மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர்வடிகால்கள் மற்றும் அது தொடர்புடைய பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
  பொதுமக்களுக்கு தடையில்லா குடிநீர் தடையில்லா குடிநீர் வழங்குதல், பால் விநியோகம் மற்றும் மின்சாரம் வழங்கல், சமுதாய உணவுக்கூடம், நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் முன்னதாகவே அளிக்கப்படுவதை உறுதி வேண்டும்.
  Published by:Anupriyam K
  First published:

  Tags: Chennai, CM MK Stalin, MK Stalin