மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதல்வர் முழு முயற்சி - உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

 • Share this:
  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

  கோவை புலியகுளம் பகுதியில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.

  Also Read : புனேவிலிருந்து 3.65 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தது

  பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நான்காண்டுகளுக்கு முன்பு மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளுக்கு கால தாமதம் ஆவது குறித்து அப்போதைய மாநில அரசும் மத்திய அரசும் மாறி மாறி பொய் மட்டுமே கூறி வந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  வெகுவிரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: