ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்.. முதல்வர் ஸ்டாலினின் பயணத்திட்டம் இதுதான்

3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்.. முதல்வர் ஸ்டாலினின் பயணத்திட்டம் இதுதான்

காட்சிப் படம்

காட்சிப் படம்

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மூன்று மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முதற்கட்டமாக இன்று திருச்சி செல்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் திருச்சி செல்லும் முதலமைச்சர், காட்டூர் அரசு ஆதி திராவிடர் பெண்கள் பள்ளிக்கு செல்கிறார்.

அங்கு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டவும், கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கவும் அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும் மாணவர்கள் பயன்பெறும் விதமாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம் எறையூர் செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள சர்க்கரை ஆலையின் புதிய அலகை தொடங்கி வைப்பதுடன், சிப்காட்டிற்கு அடிக்கல் நாட்டுகிறார்.

பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம், மாளிகை மேடு பகுதிகளில் அகழாய்வு பணிகளை பார்வையிடுகிறார். நாளை அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

First published:

Tags: CM MK Stalin