ஆளுநர் உரையின்போது நடந்த நிகழ்வுகளை நினைவூட்டி மீண்டும் அதை அரசியலாக்க விரும்பவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இறுதி நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரையுடன் நிறைவு பெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினில் பதிலுரையில் தெரிவித்துள்ளதாவது:- கடந்த 9 ம் தேதி அன்று ஆளுநர் இந்த மன்றத்தில் 2023 -2024 ஆம் ஆண்டின் தொடக்கத்துக்கான தொடக்க உரையை ஆற்றினார். அப்போது தமிழ்நாடு அரசின் பண்புகள் கூறுகளை விளக்கியும் தமிழ்நாடு அரசு எந்த வகையில் எல்லாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதையும் பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்த இருக்கக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து சுருக்கமாக அறிவித்தும் தனது உரையை இந்த மன்றத்தில் ஆற்றினார். அந்த நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை என்றார்.
தொடர்ந்து பேசுகையில், 20 மாதங்களை கடந்து இருக்கிறது கழக அரசு. அதற்குள் இமாலய சாதனையை செய்திருக்கிறோம். நாம் கடந்துள்ள காலம் குறைவுதான். ஆனால் ஆட்சியில் செய்த பணிகள் அதிகம். மக்களின் நல மட்டுமே நம்முடைய சிந்தனையில் நின்றது. அதுவே மக்களின் மனதை வென்றது. சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று இன உரிமை மாநில சுயாட்சி ஆகிய தத்துவங்கள் அடித்தளத்தில் எழுப்பப்பட்ட பல வாய்ந்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம் என்றவர், உரையாற்றிய ஆளுநருக்கு சட்டமன்றம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் என்று சொல்லும்போது என்னை மட்டுமல்ல, அமைச்சரவையை மட்டுமல்ல, நமது சட்டமன்ற உறுப்பினர் அனைவரையும் உள்ளடக்கி ஒட்டுமொத்தமாக சேர்த்துத்தான் நான் சொல்லுகிறேன்’ என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CM MK Stalin, TN Assembly