முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்து நெகிழ்ச்சி!

கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்து நெகிழ்ச்சி!

கீழடி அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்

கீழடி அருங்காட்சியகத்தில் செல்ஃபி எடுத்துக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்

CM M.K. Stalin : சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

’கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள வளர்ச்சி பணிகள், சட்டம் - ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் 3 நாள் பயணமாக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார்.  அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்கள், காவல் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.18.43 கோடி மதிப்பில் தமிழ்நாட்டின் மரபுசார் கட்டிடக்கலை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.

திருப்பூரில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து ஆய்வு- தமிழ்நாடு அரசைப் பாராட்டிய பீகார் அரசின் குழு

இதனைத்தொடர்ந்து அங்கு நின்று தனது செல்போனில் செல்ஃபி எடுத்துக்கொண்டார்.  இதையடுத்து, நாகர்கோவில் தோள்சீலைப் போராட்டத்தின் 200வது ஆண்டு நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்கிறார். இவ்விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CM MK Stalin, DMK, Tamilnadu