Home /News /tamil-nadu /

ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு..!

ஓய்வுபெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு..!

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

ஒப்பந்த முறையில் பணி தொடர தற்காலிக பணி நியமனம்.

    தமிழகத்தில் இன்றுடன் ஓய்வு பெறவிருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

    கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட துப்புரவு பணியாளர்கள் என அனைவரும் பக இரவு பாராது பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக முதல்வர், இன்றுடன் ஓய்வு பெறவிருந்த மருத்துவர்கள், செவிலியர்களின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு மாதங்கள் நீட்க்கும் என உத்தரவிட்டுள்ளார். இதே போல, மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்குப் பின் ஒப்பந்த முறையில் இரண்டு மாதங்கள் பணி தொடர தற்காலிகப் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் கூறினார்.

    மேலும் பொதுநலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை மக்கள் வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

     




    இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: CoronaVirus, Doctors

    அடுத்த செய்தி