ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே அரசின்: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு அடிக்கல்நாட்டு விழாவில் முதல்வர்

ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே அரசின்: காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு அடிக்கல்நாட்டு விழாவில் முதல்வர்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

புதுக்கோட்டை குன்னத்தூர் பகுதியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டி கொடியசைத்து நதிநீர் இணைப்புத் திட்ட பணிகளை தொடங்கி வைத்தனர்.

 • Share this:
  நதி நீர் இணைப்பு அடிக்கல் நாட்டு விழாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டிராக்டரில் வருகை தந்தார். அடிக்கல் நாட்டுக்குப் பிறகு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ‘நதிநீர் இணைப்பு என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்று வந்ததில் இருந்து தற்போதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 100 ஆண்டுகளில் செய்யக்கூடிய பணிகளை 10 ஆண்டுகளில் செய்துள்ளோம். காவிரி நதிநீர் பிரச்னையை அரசிதழில் வெளியிட்டது அ.தி.மு.க அரசு. அதற்கு முன்பு மாநிலத்தில் திமுகவும், மத்தியில் காங்கிரசும் ஆட்சியில் இருந்து என்ன செய்தன. காவேரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தது நாங்கள். இதையெல்லாம் பொறுக்க முடியாமல் சிலர் புலம்புகின்றனர். எந்த காலத்திலும் ஆட்சியை மு.க.ஸ்டாலின் தட்டி பறிக்க முடியாது. தொடர்ந்து மக்களின் ஆதரவோடு 3 வது முறையும் ஆட்சியை அ.தி.மு.க அமைக்கும்’ என்று தெரிவித்தார்.

  அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘நதிநீர் இணைப்புதிட்டத்திற்கு மனம் உகர்ந்து இடம் வழங்கிய அனைவருக்கும் நன்றி. இன்று என் வாழ்நாளில் பொன்னான நாள். நதிகள் இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றியத்தில் மட்டற்ற மகிழ்ச்சி.
  14,400 கோடி மதிப்பீட்டில் இதுவரையில் பொதுப்பணிதுறை பணிகள் எதுவும் நடைபெற்றதில்லை. இதுவே முதல் முறை.

  தமிழகத்தில் 65 % வேளாண் தொழிலைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு தேவைப்படுவது நீர் என்பதால் சிறப்பாக செயல்பட்டு நீர் மேலாண்மையில் 2019-20 ஆண்டில் இந்தியாவில் முதல் மாநிலமாக தமிழகம் விளங்கி வருகின்றது. ஒரு சொட்டு நீர் கூட வீணாக கூடாது என்பதே அ.தி.மு.க அரசின் நோக்கம். நடந்தாய் வாழி காவேரி திட்டம் மத்திய அரசு அனுமதியுடன் செயல்படுத்த உள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் நடத்திய விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசின் துணையோடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த அரசு அ.தி.மு.க அரசு. ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தி.மு.க. எங்கு சென்றாலும் குறை கூறுவதே மு.க.ஸ்டாலின் வேலையாக உள்ளது’என்று தெரிவித்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: